சகுனி படம் பற்றி


சகுனி படம் பற்றி


            இயக்குனர் சங்கர் தயாளன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் படம் தான் சகுனி. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது, விளம்பரதால் மிகுந்த எதிர்பார்பை ஏற்ப்படுத்திய இந்த படம் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா....


                  ஜி.வி மறுபடியும் தன் இசையால் இந்த படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளை பெறுவரா..இந்த படத்தில் 3 குத்து பாடலும், 2 மெலடி பாடல்கள் உள்ளது. இந்த படத்தில் மனசெல்லாம் மழையே என்ற பாடல் மட்டும் மனதை வருடியது... தொடர்ந்து ஐந்து வெற்றி படத்தை தந்த கார்திக்கு ஆறவது வெற்றி கிடைக்குமா ... ?


            சந்தாணம்,கார்த்திக் காமெடி கூட்டணி இந்த படத்திலும் தொடருமா....? பார்ப்போம் ஜுலை 22 ல்...

மனம் கொத்தி பறவை.......



வெகு நாட்களுக்கு பிறகு மறுபடியும் இயக்கதில் இறங்கிய எழிலுக்கு வெற்றிமுகமே..........



தொடக்கத்திலிருந்தே நகைச்சுவையுடன் ஆரம்பித்த கதை, மெதுவாக காதல் கதை உணர்வையும் தூண்டியது. காதலுக்காக எதையும் செய்ய துணிந்த அந்த நாலு கிராமத்து ஃப்ரைண்ட்ஸ் படம் முழுக்க அடிவாங்குவது காமெடி. சிங்கம் புலி வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

படம் முழுக்க காமெடி என்றாலும், ஒரு மெல்லிய காதல் வலியை ரசிகர்களுக்கு புகுத்தியுள்ளார் இயக்குனர். முரட்டு வில்லனையும் காமெடியனாக காட்டியிருப்பது எழிலின் சிறப்பு. பார்த்தவுடன் அனைவரது மனம் கவர்ந்த கதாநாயகி காதல் வந்தும் அதை மறைப்பது அழகு. பாடல் அனைத்தும் முணுமுணுக்க வைக்கிறது. மற்றபடி தன் இசையால் மனதை வருடிய இமான் சூப்பர். மொத்தத்தில் மனம் கொத்திப் பறவை ரசிகர்களின் மனம் கவர்ந்த பறவை.


வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9

ஒரு திரைப்படம் முடிந்ததும் ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து கைத்தட்டிய அதிசயம் இந்தப்படத்திற்கு நடந்தது. அது ஒன்றும் அத்தனை எளிதான காரியம் இல்லை. மிகப்பிரமாதமான டீம் ஒர்க் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அது இந்தப்படத்திற்கு நடந்திருக்கிறது. 


https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcQpI8kv4KbWG6FP8CVfh0k5_US61WwGA0JXAqZ7_mMWUZnEw9iy



சரி வழக்கு எண் 18/9 என்ன கதை.

ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண்ணை ஒருதலையாக காதலிக்கும் ஒரு பிளாட்பார கடையில் வேலை செய்யும் இளைஞன், அதே பணக்கார வீட்டின் பெண்ணை காமத்தால் நெருங்கும் ஒரு பணக்கார இளைஞன்... இந்த இரண்டு முரணான காதல்களை கொண்டு ரசிகர்களை உணர்ச்சிப்பிழம்பாக்கி இருக்கிறார் இயக்குனர்.

https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSIICiCq4ANQswhHgVob0wykrmKpf8Yduv3OMfCQqwuqDDqwQMn


வேலு பிளாட்பார கடையில் வேலை செய்யும் இளைஞன். அவன் அந்த ஏரியாவில் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண்ணான ஜோதியை காதலிக்கிறான். ஒரு நாள் அந்தப்பெண்ணின் முகத்தில் யாரோ ஒருவர் ஆசிட் ஊற்றிவிட, அதை செய்தது வேலுதான் என போலீஸ் அவனைப்பிடித்து செல்லுகிறார்கள். அப்போது ஜோதி வேலை செய்யும் வீட்டின் பெண்ணான ஆர்த்தி வந்து, ஆசிட் ஊற்றியது தன்னை காதலிப்பதாக ஏமாற்றிய தினேஷ்தான் என்று சொல்லுகிறாள். அப்பாவி வேலு என்ன ஆனான்? ஆர்த்தியை ஏமாற்றிய தினேஷ் எதற்கு ஜோதியின் மீது ஆசிட் ஊற்றினான்? ஆசிட் ஊற்றி வெந்துப்போன ஜோதி என்ன ஆனாள்? இவர்கள் வழக்கில் போலீஸ் எடுக்கும் முடிவு என்ன என்பதை தியேட்டரில் சென்று பாருங்கள்.

வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து பலவகைகளில் மேம்பட்டு ரசிகனின் ரசனையை உயர்த்த வந்திருக்கும் படம் இது. டீட்டெய்லிங் எனப்படும் கதாபாத்திர நுணுக்கங்களில் இயக்குனர் புகுந்து விளையாடி இருக்கிறார். அனாதையாய் வந்து சேரும் வேலுவிற்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கும் ரோஸி என்கிற விபச்சாரப்பெண், அவன் சாப்பிட துவங்கும் போது கை கழுவ சொல்லுவது, ரோஸியைத்தேடி செல்லும் வேலுவை வரவேற்கும், பூட்டப்பட்டிருக்கும் ரோசியின் வீட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் ஜீஸஸ் சிலுவை டாலர், யார் கதவை தட்டினாலும் வியூ பைண்டர் வழியாக பார்த்துவிட்டுத்தான் கதவை திறக்க வேண்டும் என்று சொல்லும் பணக்கார பெண்மணி, முகமே காட்டாமல் சிபாரிசை காட்டும் அமைச்சர், என ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் உண்டான சின்ன சின்ன நுணுக்கங்கள் ஆச்சர்யப்படுத்துகிறது

அதே போல், முதல்பாதியில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிக்கும், இரண்டாவது பாதியில் கொடுக்கப்படும் லிங்க் எல்லாமே பர்ஃபெக்ட் மேட்ச். திரைக்கதையை காதலித்து எழுதுபவரால் மட்டுமே இதுசாத்தியம்.

வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீ, பார்த்த உடனே பரிதாபத்தை அள்ளிக்கொள்ளும் முகம். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளாவின் முகம் அந்த கதாபாத்திரத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசங்களை ஒரு சினிமா டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம் என்றாலும், அவரது பர்ஃபாமென்ஸ், ஒரு புத்தகம் போடும் அளவிற்கு இருக்கிறது,

ஆர்த்தியாக வரும் மனிஷா, இன்னொரு அசத்தல் கண்டுபிடிப்பு. முதல் இன்ஃபாக்சுவேஷன் வரும் உணர்வுகளை மெல்ல மெல்ல தன் முகத்தில் கொண்டுவருவதில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தினேஷின் மேல் கொள்ளும் மெல்லிய காம்ம் கலந்த காதல், நல்ல மொபைல் வைத்திருக்கிறான் என்ற ஒரு ஹைஃபை விஷயத்துக்காகவே அவன் மேல் ஒரு கிரேஸ் ஏற்படுவது இந்தக்கால காதலின் யதார்த்தம். என்னைப்பொறுத்தவரை இந்த இரண்டு ஹீரோயின்களை விட, ஆர்த்தியின் தோழியாக வரும் ஷ்வேதா... செம அழகு....சில காட்சிகளே வந்தாலும் இந்தப்பெண் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறாள்.

https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcRfwW_aSulijtSAbzp9-NEWOW5hEI-bDerEdUATm8MhnbPZM0e5

கையில் மொபைல் வைத்திருப்பவர்தான் ஷ்வேதா
சின்னசாமியாக வரும் அந்த கூத்துக்கலைஞன் சிறுவன்.. இன்னொருமொரு பிரமாதமான கண்டுப்பிடிப்பு. பெண்ணாக வேஷமிட்டு ஆடிக்காட்டுவதும், வேலுவின் கூடவே பஞ்ச் அடித்தபடியே திரிவதும் என கிடைத்த இடங்களில் எல்லாம் சிக்ஸராக வெளுத்துக்கட்டுகிறான். அவனது கிராமத்து ஸ்லாங் ப்ளஸ் பாயிண்ட்..

தினேஷாக வரும் மிதுன், ஒரு பெண்ணை எப்படி மடக்கி பிராக்கெட் போட வேண்டும் என்ற இலக்கணத்தை மிக அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார். அவனைப்பார்த்தவுடன் ரசிக்கவும். அதே சமயத்தில் நமக்கு கோவத்தையும் ஒரு சேர ஏற்படுத்தும் படியான முகவெட்டு அந்தப்பையனுக்கு... முதல்காட்டியில் அவன் ஆர்த்தியிடம் கேட்கும் ஆசிட் சம்மந்தமான டவுட்தான் படத்தின் பின்பாதியில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது யாருமே எதிர்பாராத ஒன்று. பணகார பையன்கள் நண்பர்கள் வட்டாரத்தில் தங்களை பெருமைப்படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை செவிட்டில் அறையுமாறு சொல்லி இருக்கிறார்கள். தன்னுடைய மொபைலில் ஆர்த்தியின் நம்பரை ஐட்டம் என்று ஸ்டோர் செய்திருப்பது செம..

குமரவேலாக வரும் இன்ஸ்பெக்டர், ஆரம்பத்தில் நல்லவர் போலவே தோன்றினாலும் போகப்போக வில்லத்தனம் கலந்த்தாக மாறிவிடுகிறது இது ஒன்றும் சினிமாத்தனம் இல்ல, எல்லா போலீஸார்களும் இப்படித்தான் கேஸை க்ளோஸ் செய்கிறார்கள் என்பது உண்மைதான். (சமீபத்தில் பணத்திற்காக இப்படிப்பட்ட ஒரு மோசமான போலீஸாரை சந்தித்த அனுபவம் எனக்கும் உண்டு). ஆர்த்தி அவரிடம் சில உண்மைகளை சொல்லும் போது, அவர் வாய்ஸ் ரெக்கார்டிங் பட்டனை ஆன் செய்வது, தினேஷை தண்ணி குடிக்க வைத்து அவன் கைரேகையை எடுப்பது, மஃப்டியில் போய் வேலுவை அரெஸ்ட் செய்ய சொல்வது, வேலுவை காதலை சொல்லி பிரெய்ன் வாஷ் செய்வது, ஜெயலக்‌ஷ்மியை அவாய்ட் செய்ய ஸ்டேஷனில் நுழைந்த உடன் ஏகப்பட்ட கெடுபிடி செய்வது, இறுதியில் ஜெயலக்‌ஷ்மியிடன் வேறு சில காரியத்துக்காக பிட் போடுவது என மனிதர் கலக்கி இருக்கிறார். இவருக்கு ஏற்படும் முடிவில் ஒருசேர ஒட்டுமொத்த தியேட்டரும் கைத்தட்டியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தேவைதாண்டா உனக்கு....

https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcS_C6848dwc0R0wD1Mn6cINI5lcwG58NzwBelpBIbircysZ_CsCig

ஷார்ப்பான வசனங்கள், டீட்டெய்லிங் திரைக்கதை, ஒவ்வொரு காட்சியையும் இணைத்திருக்கும் லிங்க், கதாபாத்திரத்திற்கான பின்புல மெனக்கெடல் என பிரமாதப்படுத்தி இருக்கிறார் பாலாஜி சக்திவேல். இரண்டு வருடம் கழித்து படம் கொடுத்தாலும், இன்னும் இருபது வருடம் கழித்தும் பேசும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.

கேனான் 7 டி கேமராவில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். இது ஒரு பிரமாதமான முயற்சி. இனிவரும் காலத்தில் நிறையப்பேர் இதுபோல் பல முயற்சிகளை செய்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.. முதல்பாதி முக்கால்வாசி ஸ்க்ரீனும், இரண்டாம் பாதியில் அதைவிட இன்னும் கொஞ்சம் அதிக அளவில் வைட் செயதிருக்கிறார்கள். இது போல டெக்னிக்கலாக இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். ஆனாலும் எந்தக்குறையும் யோசிக்கவிடாமல் படம் நம்மை தனக்குள் இழுத்துக்கொள்கிறது.

வாத்தியக்கருவிகளே இல்லாமல், வெறும் குரல்களை வைத்தே பாடல்களை கம்போஸ் செய்திருப்பது பாராட்டுக்குரிய முயற்சி, (பட்ஜெட் குறைப்பு?)

தமிழ்சினிமா தன்னுடைய வழக்கமான க்ளிஷே ஆடையை தூக்கியெறிந்து வருகிறது என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். தியேட்டரில் சென்று பாருங்கள் ஒரு வித்தியாசமான அனுபவம் உங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது..

http://timesofindia.indiatimes.com/photo/13848173.cms


காதல் சின்னமானது கையடக்கத் தொலைபேசி-


உன் செல்நம்பரை சேமிப்பாக்கி உன்
மொழியை -என்
செவிகளுக்கு அடைக்கலமாக்கினேன்

இரவுகளில்
நினைவுகளை நிர்மூலமாக்கி
கனவுக்கு ஓய்வு கொடுத்து
காதோரம் வார்த்தைகளை
மொழிபெயர்த்தேன்

உன்
அழைப்புக்காக காத்திருந்து
மனம் வெந்து
நம்பர் சுழற்றி வீங்கிப்போனது
என் விரல்கள்

உன் முன்னால்
காட்டமுடியாத முகபாவனையை
தனியாக காட்டி வீரம்
பேசுகின்றேன்

தாஜ்மஹாலை
கூட புறம் தள்ளிவிட்டு-என்
காதல் சின்னமானது
கையடக்கத் தொலைப்பேசி

என்
பிறந்ததினத்தை மறந்து போனாலும் உன் செல்நம்பரை
மறக்கமுடியவில்லையே
இருந்தும் வறுமையாகிப்போனது
என் வாழ்வு
உன் அழைப்புக்களில் இருந்து…–
செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

வெளிநாடு வாழ் தமிழர்கள்

சொர்க்கத்தில் தான் வாழ்கிறோம் ஆனாலும் 
சுதந்திரம் இல்லை 
செல்வத்தில் தான் திளைகிறோம் ஆனாலும் 
செழிப்பு இல்லை
நேரத்திற்கு உணவு நீர் உண்டு பசியாற ஆனாலும்
பாசத்திற்காக ஏங்குகிறோம்
காலை மாலை வேளைகளில் சிரித்துகொண்டே
இருந்தாலும் இரவானால் தன்னையும் அறியாமல் நனைகின்றன தலைஅணைகள்
எங்களது குடும்ப நினைவுகள் என்னும் கண்ணீர் துளிகளால்
இதுஎல்லாம முன்ஜென்ம வினைகளோ இப்போது அனுபவிக்கிறோம் அனைவரும் இர்ருந்தும் வெளிநாடுகளில் அனாதைகலாய்

 நான் விரைவில் வருகிறேன்.....உங்களை சந்திக்க.......